தேலீஸ்

   இன்று பள்ளியின் முதல் நாள்  வகுப்பில் கணித மேதை தேலீஸ் (பொ.கா.மு 620 - 546 ) அவர்களை பற்றி பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.
  
    தேலீஸ் கிரேக்க நகரமாகிய மிலிடஸில் பிறந்தார். அவர் வடிவியலி்ல் குறிப்பாக முக்கோணங்களின் அறிமுறை மற்றும் செய்முறை புரிதலுக்காக நன்கு அறியப்பட்டவர்.
   தேலீஸ் பிரமிடுகளின் உயரத்தைக் காணவும், கடற்கரைக்கும் கப்பலுக்கும்  இடைப்பட்ட தூரத்தை கணக்கிடவும் வடிவியலைப் பயன்படுத்தினார்.
   கிரேக்க நாட்டின் ஏழு ஞானிகள் அல்லது ஏழு துறவிகளில் ஒருவராக விளங்கினார்.
    மேற்கத்திய பண்பாட்டின் முதல் தத்துவ மேதையாக அனைவராலும் மதிக்கப்பட்டார்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

கலைத்திட்டம்