ஒரு நாற்கரத்தின் எதிர்ப் பக்கங்கள் சமம் எனில் அது ஓர் இணைகரம் ஆகும். இணைகரத்தின் பண்புகள் ஓர் இணைகரத்தின் எதிர் பக்கங்கள் சமம். இணைகரத்தின் ஒரு மூலைவிட்டம் அதனை இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கின்றது. ஓர் இணைகரத்தில் எதிர் கோணங்கள் சமம். இணைகரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக்கூறிடும். ஒரே அடித்தளத்தையும் ஒரு சோடி இணைக் கோடுகளுக்கிடையேயும் அமையும் இணைகரங்களின் பரப்புகள் சமம்.
இன்று பள்ளியின் முதல் நாள் வகுப்பில் கணித மேதை தேலீஸ் (பொ.கா.மு 620 - 546 ) அவர்களை பற்றி பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன். தேலீஸ் கிரேக்க நகரமாகிய மிலிடஸில் பிறந்தார். அவர் வடிவியலி்ல் குறிப்பாக முக்கோணங்களின் அறிமுறை மற்றும் செய்முறை புரிதலுக்காக நன்கு அறியப்பட்டவர். தேலீஸ் பிரமிடுகளின் உயரத்தைக் காணவும், கடற்கரைக்கும் கப்பலுக்கும் இடைப்பட்ட தூரத்தை கணக்கிடவும் வடிவியலைப் பயன்படுத்தினார். கிரேக்க நாட்டின் ஏழு ஞானிகள் அல்லது ஏழு துறவிகளில் ஒருவராக விளங்கினார். மேற்கத்திய பண்பாட்டின் முதல் தத்துவ மேதையாக அனைவராலும் மதிக்கப்பட்டார்.
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் மூளை அடிப்படை கற்றல் பற்றி படித்தேன். கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் அறிவு கட்டமைப்பு கொள்கையின் கற்பித்தல் அணுகுமுறை பற...
Comments
Post a Comment