ஒழுக்க முறைகள்
கணிதம் கற்பித்தல் பாடவேளையில் வென்படங்களை பயன்படுத்தி கணங்களை குறித்தல் பற்றி குறுநிலை கற்பித்தல் நிகழ்ந்தது.
கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் மாணவர்களைக் கற்றல் செயல்களில் ஈடுபடச் செய்தலை மேம்படுத்திடும் வழிமுறைகள் பற்றி தேர்வு எழுதினேன்.
தற்கால இந்தியா மற்றும் கல்வி பாடவேளையில் சிறந்த இந்திய சிந்தனையாளர்கள் மூவரின் பயிற்றுமொழி குறித்த கருத்துகள் பற்றி தேர்வு எழுதினேன். இரபீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
குழந்தையும் வளர்ச்சியும் பாடவேளையில் காற்று மாசுபடுதல் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் அமிலமழை பற்றியும் அறிந்து கொண்டேன்.
பாடங்களையும் பாடப்பிரிவுகளையும் புரிந்து கொள்ளல் பாடவேளையில் செவ்வகம் மற்றும் சதுரத்தின் பரப்பளவு, சுற்றளவு காண சூத்திரம் பற்றி அறிந்தேன்.
பாலினம் பள்ளி மற்றும் சமூகம் பாடவேளையில் பாட்டி வடை சுட்ட கதை மூலம் மாணவர்களுக்கு பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்கும் வழிமுறைகளை அறிந்தேன்.
Comments
Post a Comment