பாலினம், பள்ளி மற்றும் சமூகம்

வணக்கம். பாலினம், பள்ளி  மற்றும்  சமூகம்  தேர்வு   நடந்தது.  இன்று  காலையில்  9:30  மணி  முதல்   11:10  வரை  படித்தோம்.  அதில்   இரண்டு   அலகுகள்   தேர்விற்கு  படிக்க   சொன்னார். முதல்   பாடம்   நன்றாக  படித்தேன். இரண்டாம்  பாடம்   பாதி    தான்   படித்தேன்.
1.பெண்கள்    மீதான   வன்முறையும்   மகளிர்   பாதுகாப்பும்
2.பொதுமக்களுக்கான  செய்திப்பரப்பு   ஊடகங்களும் , பாலினமும்
ஆனால்   20  பக்கம்  தேர்வு   எழுதினேன்.  எளிமையாக  இருந்தது.    முதலில்  நான்கு   வினாக்களுக்கு    பதில்   எழுதினோம்.  பிறகு   கடைசி   வினாவிற்கு  விடை  எழுதினேன்.  முதல்  கேள்வி
1. பள்ளி , குடும்பம்   மற்றும்   பணிபுரியும்   இடங்களில்   சிறுமிகள்   மற்றும்   பெண்களின்   பாதுகாப்பை   ஆராய்க .
2. பாலியல்   கொடுமைகள்   மற்றும்  வன்முறைகளை   பற்றி   விவரி.
3.பாலியல்   துன்புறுத்தல்களையும் ,  வன்கொடுமைகளையும்   தடுப்பதில்   கல்வியின்  பங்கு   பணிகளை   பற்றி   ஆராய்க .
4. பெண்களின்   உடலைப்   பண்டமாகக்    கருதுதலை    எதிர்த்தல்   என்பதனை   விவரி.
5.பொது   மக்களுக்கான   தகவல்   பரப்பு   ஊடகங்களில்   பாலின   சித்தரிப்புகளை    ஆராய்க.
 தேர்வு   12:45  மணிக்கு   முடிந்தது.  மதியம்   கணிதம்   கற்பித்தல்   நுணுக்கங்கள்   படித்தோம்.    கணித  ஆசிரியரின்  பண்புகள்   படித்தேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்