கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி
வணக்கம்.இன்று உலக மகளிர் தினம். இன்று ஆப் கோர்ஸ் பேப்பர் தேர்வு எழுதினோம். கலைத்திட்டத்தில் விரவியுள்ள மொழி படித்தோம். காலையில் 10 மணியிலிருந்து 11:30 வரை படித்தோம். பிறகு 11:30 யிலிருந்து 1 மணி வரைத் தேர்வு எழுதினோம். வினாக்கள் எளிமையாகத்தான் இருந்தது. கொஞ்சம் மறந்து போய்விட்டது . இருந்தாலும் ஓரளவு சரியாக எழுதினேன். 1.பாடப்பொருள் விளக்க பகுதிகளை புரிந்து கொள்ளுதலில் தன்மையையும் , உத்தியையும் விளக்குக. 2. வகுப்பறையில் பாடப்பகுதிகளை நன்கு கற்பதற்கு உதவிடும் வகையில் வாய்மொழிப் பயன்பாட்டை மேம்படுத்திடும் உத்திகளை விளக்குக . 3. விளக்குதல் வகையில் அமைந்த உரை மற்றும் கதை வடிவில் விவரிக்கப்படும் உரை ஆகியவற்றை ஒப்பிடுக . 4. பாடப்பொருள் பகுதிகளை படித்தறிதல் என்னும் செயல்பாட்டையும் அதில் இடம்பெறும் படிநிலைகளையும் விளக்குக . 5. கருத்துப் பரிமாற்ற வகையில் அமைந்த உரை மற்றும் ஆழ்ந்த சிந்தனையை வெளிப்படுத்தும் உரையை ஒப்பிடுக . 6. எழுதுதல் என்னும் செயல்பட்டினை அதில் இடம் பெறும் படிநிலைகளைக் கொண்டு விளக்குக. 7. மனப்பதிவுக் கட்டமைப்புக் கோட்பாட்டை விளக்குக. மதியம் பாடங்கள் மற்றும் பாடப்பிரிவுகளைப் புரிந்துக் கொள்ளுதல் படித்தேன். இதில் தேசிய முன்னேற்றத்திறகு உதவும் வகையிலான அறிவியல் மற்றும் கணிதம் கற்பித்தல் படித்தேன் . பிறகு பேசிக் கொண்டிருந்தோம். நன்றி
Comments
Post a Comment