பித்தகராஸ் தேற்றம்
பித்தகராஸ் தேற்றம் அல்லது பித்தேகோரசு தேற்றம் அல்லது பைத்தகரசின் தேற்றம் ( Pythagorean theorem அல்லது Pythagoras' theorem ) என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் ஒரு கூற்று. பித்தகராஸ் தேற்றம் : ஒரு செங்கோண முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கமாகிய செம்பக்கத்தின் (கர்ணத்தின்) ( c ) இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் ( a , b ) இருமடிகளின் கூட்டுக்கு ஈடு (சமம்). {\displaystyle a^{2}+b^{2}=c^{2}\,}