பிபோனாகி

   கணிதம் கற்பித்தல் பாடவேளையில் பின்வருவனவற்றை தெரிந்து கொண்டேன்.
  மெய்யெண்களின் தொடர்வரிசை என்பது குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்ட (அ) பட்டியலிடப்பட்ட மெய்யெண்களின் வரிசையாகும்.
   (I) ஒரு தொடர்வரிசை முடிவுறு எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்டிருந்தால் அது முடிவுறு தொடர்வரிசை எனப்படும்.
உதாரணம்:
  2,4,6,8,...,2010
    (II) ஒரு தொடர்வரிசையில் முடிவுறா எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பின் அது முடிவுறாத் தொடர்வரிசை எனப்படும்.
உதாரணம்:
   0.3, 0.33, 0.333, 0.3333,…
பிபோனாகி தொடர்வரிசை   
       F₁ = F₂= 1 ,  Fn = Fn-1  +Fn-2,  
 n = 3, 4,.... என்பதிலிருந்து பெறப்படும் தொடர்வரிசை   பிபோனாகி தொடர்வரிசை (Fibonacci sequence) எனப்படும்.
உதாரணம் : 1,1, 2, 3, 5, 8, 13,…
  சூரியகாந்தி பூவில் உள்ள விதைகளின் அமைப்பு போன்று பிபோனாகி தொடர்வரிசை இயற்கையில் காணப்படுகிறது. சூரியகாந்தி பூவில் விதைகள் சுருள் சுருளாக எதிர் எதிர் திசையில் அமைந்துள்ளன. அந்தச் சுருள்களின் எண்ணிக்கை பிபோனாகி தொடர்வரிசையில் உள்ள அடுத்தடுத்த எண்களைக் குறிக்கிறது.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்