மதிப்பிடுதல்

மதிப்பிடுதல்:
   மதிப்பிடுதல் என்பது "உற்றுநோக்குதல், அளவிடுதல், சோதித்தறிதல் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஒரு பொருள் (அ) செயலின் தற்போதைய நிலையை புறவயத் தன்மையுடன் புரிந்து கொள்ளுதல்" ஆகும்.
கற்றலாகும் மதிப்பீடு:
   மதிப்பிடல் என்னும் செயல் மூலம் மாணவர்கள் தாம்
எத்தகைய கற்பவர், எவ்வாறு கற்கிறோம் என்பவை குறித்து அறிவதோடு, தமது கற்றல் செயல்பாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை என்பது பற்றிய அறிந்துணர்தல் நிகழ்வதால் கற்றலாகும் மதிப்பிடலை, மேற்கொண்டு கற்றலுக்கான வழுமுறை எனலாம்.
    மாணவர்கள் தம்மைப் பற்றியும், தமது கற்றலைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுவதால், கற்றலாகும் மதிப்பிடல் அறிதலை அறிந்துணரும் வழிமுறை எனப்படுகிறது.
    கற்றலாகும் மதிப்பிடல், தமது கற்றலை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை மாணாக்கருக்கு உணர்த்துகிறது.
ஆகியவற்றை இன்று அறிந்து கொண்டேன்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்