முதலுதவி

முதலுதவி:
    போர்க்களத்தில் காயம் பட்டவர்களுக்கு அவர்களது உயிரை காப்பதற்காக மேற்கொண்ட முதல் நடவடிக்கை முதலுதவியாக இருந்தது. இதன் அடிப்படையில் எஸ்மார்க் என்னும் மருத்துவர் முதன்முதலில் முதலுதவி புத்தகத்தை எழுதினார்.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மேயர் ஆப்லாஸோன்  என்பவர் முதலுதவிக்கான முக்கோணத் துணியை கண்டுபிடித்தார். 1872ஆம் ஆண்டு குதிரைகள் பூட்டிய வண்டிகள் மருத்துவ ஊர்திகளாக பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் உலகளவில் முதலுதவியை மேற்கொள்கின்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேசன் ஆரம்பிக்கப்பட்டது.
முதலுதவியின் பொருள்:
    காயம்பட்டவருக்கோ (அ) திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டவருக்கோ மருத்துவம் கிடைக்கும் வரை, அங்குள்ள சாதனங்களையும், பொருட்களையும் உபயோகித்து செய்கின்ற உதவிக்கு முதலுதவி என்று பெயர்.
முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்
    முதலுதவி பெட்டிகள் சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று வகைகளில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இப்பெட்டிகள் பிளாஸ்டிக் (அ) உலோகத்தால் எளிதாக திறந்து மூடக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். பெட்டியின் மேல் முதலுதவிக்குறி [+]யும், முதலுதவி என்றும் எழுதப்பட வேண்டும். காலாவதியான மருந்துகள் இல்லாமல் இருத்தல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்