கணங்கள்

  கணிதம் கற்பித்தல் பாடவேளையில் கணங்கள் பற்றி இன்று பின்வருவனவற்றை அறிந்து கொண்டேன்.
கணங்கள்:
  கணம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாகும். ஒரு கணத்திலுள்ள பொருட்கள் அதன் உறுப்புகள் எனக் கூறப்படும்.
உதாரணம்:
1. "சென்னையிலுள்ள அனைத்து உயரமான மனிதர்களின் தொகுப்பு"என்பது ஒரு கணத்தை அமைக்க இயலாது.
2. " தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கணம் " என்பது ஒரு கணம் ஆகும்.
முடிவுறு கணம்:
   ஒரு கணத்தில் உள்ள உறுப்புகள் முடிவுறு எண்ணிக்கையில் இருப்பின், அக்கணம் முடிவுறு கணம் எனப்படும்.
முடிவிலி கணம்:
   ஒரு கணம் முடிவுறு கணமாக இல்லாமலிருப்பின், அது முடிவுறா கணம் (அ) முடிவிலி கணம் எனப்படும்.
கண எண்:
   கணம் X ஒரு முடிவுறு கணம் எனில், X- ன் உறுப்புகளின் எண்ணிக்கை அதன் கண எண் (அ) ஆதி எண்  n(X) எனப்படும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்