கணங்கள் பற்றிய தகவல்கள்

   கணங்கள் பற்றிய பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.
  ஒரு கணம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொடுட்களின் தொகுப்பாகும்.
  கணம் மூன்று முறைகளில் குறிப்படப்படுகிறது.
1) விவரித்தல் முறை
2) கணக்கட்டமைப்பு முறை
3) பட்டியல் முறை.
   கணத்திலுள்ள உறுப்புகளின் எண்ணிக்கை ஆதி எண் என அழைக்கப்படுகிறது. அதனை n(A) எனக் குறிப்பிடுவர்.
   உறுப்பினர்கள் இல்லாத கணம் வெற்றுக் கணம் என அழைக்கப்படுகிறது.
   கணத்திலுள்ள உறுப்புகள் பூச்சியமாகவோ அல்லது முடிவுறு எண்ணிக்கையிலோ இருந்தால் அது முடிவுறு கணம் என அழைக்கப்படுகிறது. இல்லையெனில், முடிவுறாக் கணம் என அழைக்கப்படுகிறது.
   இரு முடிவுறு கணங்களின் ஆதி எண்கள் சமம் எனில், அவை சமான கணங்கள் என அழைக்கப்படுகின்றன.
   இரு கணங்களிலுள்ள அனைத்து உறுப்புகளும் ஒரே மாதிரியான உறுப்புகளாக இருந்தால் அவ்விரு கணங்களும் சம கணங்களாகும்.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்