எண்ணியல் வரலாறு

   எண்ணியல் அறிவின் அடிப்படை கூறாய் கணித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

கிரேக்க கணித வல்லுநர் பிதாகரஸ் மற்றும் அவர்தம் சீடர்கள் ' ஒவ்வொன்றும் எண் ' என்றும் அண்டத்தின் விளக்கம் எண்களை மையமாக கொண்டு அமைந்துள்ளது என்றும் நம்பினார்கள்.
   எண்கள் எழுதும் முறையானது சுமார் 10,000 ஆண்டுகள் முன்பே தோன்றி வளர்ச்சி அடைந்துள்ளது. இன்று நாம் பயன்படுத்தும் எண்முறை வளர இந்தியாவின் பங்கு மகத்தானது. எண் முறையினம் முழுமையான வளர்ச்சியை பெற சுமார் 5000 ஆண்டுகள் ஆனது.
   எல்லா கணித்த்திற்கும் ஊற்று முகப்பாய் முழு எண்கள் இருக்கின்றன. இன்றைய எண்முறையினம் இந்திய அரேபிய எண் முறை என்று அழைக்கப்படுகிறது.
   இம்முறையில் 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண்கள் பயன்படுத்தப்படுகிறது. இது பத்தடிமான எண்முறையினம் என்று அழைக்கப்படுகிறது. பத்து என்ற பொருளுடைய ஆங்கில மொழியின் 'டெஸிமல்' என்ற வார்த்தை லத்தீன் மொழியின் 'டெஸி' என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது.

Comments

Popular posts from this blog

இணைகரம்

தேலீஸ்

கலைத்திட்டம்