Posts

Showing posts from July, 2018

பிபோனாகி

Image
   கணிதம் கற்பித்தல் பாடவேளையில் பின்வருவனவற்றை தெரிந்து கொண்டேன்.   மெய்யெண்களின் தொடர்வரிசை என்பது குறிப்பிட்ட வரிசையில் அமைக்கப்பட்ட (அ) பட்டியலிடப்பட்ட மெய்யெண்களின் வரிசையாகும்.    (I) ஒரு தொடர்வரிசை முடிவுறு எண்ணிக்கையில் உறுப்பினர்களை கொண்டிருந்தால் அது முடிவுறு தொடர்வரிசை எனப்படும். உதாரணம் :   2,4,6,8,...,2010     (II) ஒரு தொடர்வரிசையில் முடிவுறா எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருப்பின் அது முடிவுறாத் தொடர்வரிசை எனப்படும். உதாரணம் :    0.3, 0.33, 0.333, 0.3333,… பிபோனாகி தொடர்வரிசை           F₁ = F₂= 1 ,  Fn =  F n-1    + F n-2 ,    n = 3, 4,.... என்பதிலிருந்து பெறப்படும்   தொடர்வரிசை    பிபோனாகி தொடர்வரிசை (Fibonacci sequence) எனப்படும். உதாரணம் : 1,1, 2, 3, 5, 8, 13,…   சூரியகாந்தி பூவில் உள்ள விதைகளின் அமைப்பு போன்று பிபோனாகி தொடர்வரிசை இயற்கையில் காணப்படுகிறது. சூரியகாந்தி பூவில் விதைகள் சுருள் சுருளாக எதிர் எதிர் ...

டிஸ்லெக்சியா பிரச்சினைகளை சரிசெய்யும் முறைகள்

Image
   அனைவருக்குமான பள்ளியை உருவாக்குதல் பாடவேளையில் பின்வரும் தகவல்களை அறிந்து கொண்டேன்.      ஆசிரியர்கள் பாடப்பொருளை கற்றுத்தரும்போது ஐம்புலன்களை பயன்படுத்தி கற்றுத்தர வேண்டும்.    மாதிரி உருவங்கள், காட்சிப் படங்கள், எழுத்துக்கள், எண்கள் உள்ள மின் அட்டைகளை பயன்படுத்தி கற்றுத்தர வேண்டும்.    புதிய வார்த்தைகளை குழந்தைகள் கற்க நேரிடும் போது அதன் பொருள் விரிவாக விவரிக்கப்பட வேண்டும்.     குழந்தைகள் படிக்கும்போது படிக்கக் கூடிய வார்த்தையின் மீது கைவிரலை வைத்து படிக்க வேண்டும்.     எழுத்துகளை கற்பிக்கும் போது ஆசிரியர் செய்ய வேண்டியவை ¡) எழுத்தை சத்தமாக கூறுதல் ¡¡) எழுத்துகளின் மீது எழுத வைத்தல் ¡¡¡) எழுத்தை பார்க்காமல் எழுத வைத்தல்     குழந்தைகளை உறக்க வாசிக்கும்படி பயிற்சி தருதல்     குழந்தைகள் வாசிக்கும் போது ஏற்படும் தவறுகளை உடனுக்குடன் சரிசெய்வதுடன் நிறுத்தி வாசிக்க செய்யவும் தூண்ட வேண்டும்.

முதலுதவி

முதலுதவி :     போர்க்களத்தில் காயம் பட்டவர்களுக்கு அவர்களது உயிரை காப்பதற்காக மேற்கொண்ட முதல் நடவடிக்கை முதலுதவியாக இருந்தது. இதன் அடிப்படையில் எஸ்மார்க் என்னும் மருத்துவர் முதன்முதலில் முதலுதவி புத்தகத்தை எழுதினார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவர் மேயர் ஆப்லாஸோன்  என்பவர் முதலுதவிக்கான முக்கோணத் துணியை கண்டுபிடித்தார். 1872ஆம் ஆண்டு குதிரைகள் பூட்டிய வண்டிகள் மருத்துவ ஊர்திகளாக பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் உலகளவில் முதலுதவியை மேற்கொள்கின்ற அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பாக செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அசோசியேசன் ஆரம்பிக்கப்பட்டது. முதலுதவியின் பொருள் :     காயம்பட்டவருக்கோ (அ) திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டவருக்கோ மருத்துவம் கிடைக்கும் வரை, அங்குள்ள சாதனங்களையும், பொருட்களையும் உபயோகித்து செய்கின்ற உதவிக்கு முதலுதவி என்று பெயர். முதலுதவி பெட்டியில் இருக்க வேண்டிய பொருட்கள்     முதலுதவி பெட்டிகள் சிறியது, நடுத்தரம், பெரியது என மூன்று வகைகளில் வடிவமைக்கப் பட்டுள்ளன. இப்பெட்டிகள் பிளாஸ்டிக் (அ) உலோகத்தால் எ...

பேச்சுத்திறன் குறைபாடு

பேச்சுத்திறன் குறைபாடு :    பேச்சுத்திறன் குறைபாட்டை இரு பெரும் வகைகளில் உள்ளடக்கலாம். அவையாவன    1. ஊமையாயிருத்தல் (அ) பேச முடியாமை     2. தெளிவற்ற பேச்சை வெளிப்படுத்துதல்.    பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கான கல்வி வழிகாட்டல்களாவன :    1. பேச்சை திருத்தும் வல்லுநர்கள் மூலம் குறையுள்ள குழந்தைகளின் பேச்சை கண்டறிந்து திருத்துவதற்கு முன்வர வேண்டும்.     2. வீடு, பள்ளிகளில் பேசுவதற்கு யார் கடினமாக உணருகிறாரோ அவர்களின் பேச்சை திருத்துவதே வல்லுநர்களின் முதல் கடமையாகும்.     3. பெற்றோர்கள் இலக்கணப் பிழையின்றி பேச குழந்தைகளை ஊக்குவித்து பயிற்சி தருதல் வேண்டும்.     4. தகவல் தொடர்பு சாதனங்களான டீவி, வானொலி, கணினி, ஒலிநாடா கருவிகளை பேச்சுத்திறனை வளர்க்க பயன்படுத்த வேண்டும்.     5. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளல்     6. பேச்சு தொடர்பான மருத்துவ வல்லுனர்கள், உளவியல் நிபுணர்களிடம் சரிசெய்ய பரிந்துரைக்க வேண்டும்.     7. பயம், கூ...

மதிப்பிடுதல்

மதிப்பிடுதல் :    மதிப்பிடுதல் என்பது "உற்றுநோக்குதல், அளவிடுதல், சோதித்தறிதல் போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்தி, ஒரு பொருள் (அ) செயலின் தற்போதைய நிலையை புறவயத் தன்மையுடன் புரிந்து கொள்ளுதல்" ஆகும். கற்றலாகும் மதிப்பீடு :    மதிப்பிடல் என்னும் செயல் மூலம் மாணவர்கள் தாம் எத்தகைய கற்பவர், எவ்வாறு கற்கிறோம் என்பவை குறித்து அறிவதோடு, தமது கற்றல் செயல்பாட்டில் செய்ய வேண்டிய மாற்றங்கள் எவை என்பது பற்றிய அறிந்துணர்தல் நிகழ்வதால் கற்றலாகும் மதிப்பிடலை, மேற்கொண்டு கற்றலுக்கான வழுமுறை எனலாம்.     மாணவர்கள் தம்மைப் பற்றியும், தமது கற்றலைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவுவதால், கற்றலாகும் மதிப்பிடல் அறிதலை அறிந்துணரும் வழிமுறை எனப்படுகிறது.     கற்றலாகும் மதிப்பிடல், தமது கற்றலை எவ்வாறு சீர்படுத்தி கொள்ள வேண்டும் என்பதை மாணாக்கருக்கு உணர்த்துகிறது. ஆகியவற்றை இன்று அறிந்து கொண்டேன்.

கணங்கள்

  கணிதம் கற்பித்தல் பாடவேளையில் கணங்கள் பற்றி இன்று பின்வருவனவற்றை அறிந்து கொண்டேன். கணங்கள் :   கணம் என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பாகும். ஒரு கணத்திலுள்ள பொருட்கள் அதன் உறுப்புகள் எனக் கூறப்படும். உதாரணம் : 1. "சென்னையிலுள்ள அனைத்து உயரமான மனிதர்களின் தொகுப்பு"என்பது ஒரு கணத்தை அமைக்க இயலாது. 2. " தமிழ்நாட்டிலுள்ள அனைத்து உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கணம் " என்பது ஒரு கணம் ஆகும். முடிவுறு கணம் :    ஒரு கணத்தில் உள்ள உறுப்புகள் முடிவுறு எண்ணிக்கையில் இருப்பின், அக்கணம் முடிவுறு கணம் எனப்படும். முடிவிலி கணம் :    ஒரு கணம் முடிவுறு கணமாக இல்லாமலிருப்பின், அது முடிவுறா கணம் (அ) முடிவிலி கணம் எனப்படும். கண எண் :    கணம் X ஒரு முடிவுறு கணம் எனில், X - ன் உறுப்புகளின் எண்ணிக்கை அதன் கண எண் (அ) ஆதி எண்  n ( X ) எனப்படும்.

ஆசனப் பயிற்சி

   ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய வழிமாற்றுகளைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன். அவையாவன:   1. அதிகாலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளல்    2. காற்றோட்டம் உள்ள இடத்தை தேர்வு செய்தல்    3. சமமான தரையில் துண்டு (அ) விரிப்பின் மேல் பயிற்சியினை மேற்கொள்ளல்    4. ஆசனப் பயிற்சியை மேற்கொள்ளும் முன்னர் தசைகளுக்கு சூடேற்றும் பயிற்சியினை மேற்கொள்ளல்    5.முதன்முதலில் ஆசனப் பயிற்சியை கற்றுக்கொள்பவர் எளிமையான ஆசனப் பயிற்சிகளை கற்றுக்கொள்ளல்    6. ஆசனப் பயிற்சியினை மேற்கொள்ளும் போது சுவாசத்தை உணர்ந்து உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு சுவாசத்துடன் செய்தல்    7. ஆசனப் பயிற்சிகளை முறையாக கற்றுணர்ந்த ஆசான்களின் வழிகாட்டுதலின்படி பயிற்சியினை மேற்கொள்ளல்    8. பெண்கள் தங்களது மாதவிடாய் மற்றும் கருவுற்ற காலங்களில் கடினமான ஆசனப் பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.    9. உடல் நோய்வாய் பட்டிருக்கும்பொழுதும், மிகுந்த உடல் சோர்வில் இருக்கும்பொழுதும் கடினமான ஆசனப் பயிற்ச...

அறிவாராய்ச்சியியல்

அறிவுத்தொகுப்பும் கலைத்திட்டமும் பாடவேளையில் அறிவு பற்றி அறிந்து கொண்டேன்.   அறிவு என்பது தத்துவத்தின் முக்கியமான பகுதி; அறிவியலின் அடித்தளம்.    பிளேட்டோ என்னும் கிரேக்க தத்துவ ஞானி அறிவு என்பதை நியாயப்படுத்தப்பட்ட உண்மையான நம்பிக்கை என்று விளக்கினார். அறிவு என்பது அறிவுத்தொகுப்பு, அறிவு பெறும் முறையைச் சார்ந்தது. அறிவைப் பெறுவதற்கு புலன்காட்சி, தகவல் பரிமாற்றம், பகுத்தாராய்தல் போன்றவை அவசியமாகிறது.

யோகா வரலாறு

   இன்று யோகா - உடல்நலம் மற்றும் உடற்கல்வி பாடவேளையில்     யோகா என்பது உடலுடன் மனதையும் இணைப்பது ஆகும்    இலக்கிய நூலின்படி யோகா என்பது " ஹதயோகா ", " பிரதிபிகா " ஆகும். இதில் சிவபெருமான் யோகா கலையின் முதன்மையான குரு என்று கருதப்படுகிறார். பகவத்கீதையின்படி கிருஷ்ணா யோகாவின் முதல் குரு என கருதப்படுகிறார்.     பல்வேறு வரலாற்று ஆராய்ச்சியின்படி வேத காலத்திலேயே யோகா இருந்தது. யோக காலத்திற்கு பிறகு மகரிஷி பதஞ்சலி முனிவர் யோகா முறைகளை முறைப்படுத்தி பதஞ்சலி யோக சூத்திரங்களை வடிவமைத்தார்.     யோகா வளர்ச்சியடைய பதஞ்சலி முனிவர் அடித்தளமாக அமைந்ததாலும், நவீன யோகாவின் தந்தை என்றும் அழைக்கப்படுவதாலும் யோகா வல்லுனர்கள் யோகா வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் விளக்குகின்றனர். ¡) பதஞ்சலி காலத்திற்கு முன்பு யோகா ¡¡) பதஞ்சலி கால யோகா ¡¡¡) பதஞ்சலி காலத்திற்கு பின்பு யோகா iv) இன்றைய உலகத்தில் யோகா    ஆகியவை பற்றி அறிந்து கொண்டேன்.