முக்கிய நிகழ்வு
புகழ்பெற்ற கணிதமேதை இராமானுஜம் அவர்களின் வாழ்வில் நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி காணலாம். ஒரு முறை கணித வல்லுநர் பேராசிரியர் G.H. ஹார்டி அவர்கள் திரு. இராமானுஜன் அவர்களை பார்க்க வாடகை மகிழ்வுந்தில் வந்தார். அவர் வந்த வாடகை மகிழுந்தின் எண் 1729. இருவரும் பேசிக் கொள்ளும் போது ஹார்டி அவர்கள் தான் வந்த வாடகை மகிழ்வுந்தின் எண் 1729 என்றும், அது ஒரு " மந்தமான எண்" என்றும் கூறினார். உடனே இராமானுஜன் அவர்கள் 1729 என்பது மிகவும் அற்புதமான எண் என்றும் அவ்வெண்ணானது இரு கன எண்களின் கூடுதலாக இரு வெவ்வேறு முறைகளில் எழுதக்கூடிய மிகச்சிறிய எண் எனவும் விளக்கினார். அதாவது, 1729 = 1728 + 1 = 12 3 + 1 1729 = 1000 + 729 = 10 3 + 9 3 1729 ஐ இராமானுஜன் எண் என்று அழைக்கிறோம்.