கற்றலும் கற்பித்தலும் பாடவேளையில் சிறந்த கற்பித்தலின் இயல்புகள், கற்பித்தல் குறித்து புகழ்பெற்ற சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவ அறிஞர்களின் கருத்துகள் ஆகியவற்றை படித்தேன். அதில் மேலைநாட்டு அறிஞர்களான அரிஸ்டாட்டில் , ஜான் டுயி , ரூஸோ , ஜான் லாக் , புரோபெல் மற்றும் இந்திய கல்வி சிந்தனையாளர்களான மகாத்மா காந்தியடிகள் , இரபீந்திரநாத் தாகூர் , விவேகானந்தர் , ரிக் வேதம் , பாணினி ஆகியோர் கூறிய கருத்துகள் இடம்பெற்றிருந்தது. குழந்தை பருவமும் அதில் ஏற்படும் வளர்ச்சிகளும் பாடவேளையில் நகரமயமாக்கல் மற்றும் மக்கள் தொகை அடர்த்தி ஆகியவை குழந்தைகளின் உடல், மனம், ஒழுக்கம், மனவெழுச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றி படித்தேன்.