இன்று காலை 7.30 மணியளவில் கல்லூரியில் இருந்து ஏற்காடு கல்வி சுற்றுலா சென்றோம். ஏற்காட்டில் மான்போர்ட்ஸ் உந்து உறைவிட பள்ளிக்குச் சென்று அப்பள்ளி மாணவர்களின் கல்வி முறை மற்றும் மொழி பற்றி அறிந்து கொண்டேன். மாணவர்களுக்கு முதல் மொழியாக ஆங்கிலமும் இரண்டாவது மொழியாக தமிழ் , ஹிந்தி மற்றும் பிரெஞ்சு போன்ற மொழிகள் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கற்பிக்கப்படுகின்றன. பழங்கால நாணயங்கள், விலங்குகளின் உடல் பாகங்கள் மற்றும் புகழ்பெற்ற தலைவர்கள் படங்களை பார்த்தேன். பள்ளியானது ஜூன் முதல் நாள் 1917 அன்று 7 மாணவர்களை மட்டுமே கொண்டு தொடங்கப்பட்டது. நவீன தொழில் நுட்ப கருவிகளை பயன்படுத்தி கற்பிக்கப்பட்டது. மாணவர்கள் அவர்களின் தனித்திறமையை வளர்த்து கொள்ள உரிய வசதிகளான விளையாட்டு மைதானம், இசை, நடனம், குதிரை மற்றும் நீச்சல் குளம் போன்றவை காணப்பட்டன.